
புதுடில்லி: வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்து விட்டனர் எனக் காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் பிரியங்கா நாளை (அக்.,23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வரும் நவ., 13ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதிக்குப் பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட நாளைப் பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யும்போது, எங்களுடன் வாருங்கள். வயநாடு மக்கள் தேவைக்காகப் பார்லிமென்டில் அவர்களது குரலாகப் பிரியங்கா ஒலிப்பார். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

