பிக் பாஸ் தர்ஷன் கைது செய்யப்பட்டது சரியா..? சனம் செட்டி ஆவேசம்..!

Advertisements

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் தான் தர்ஷன். இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நேற்று தன்னுடைய வீட்டு முன்பு கார் நிறுத்தியது தொடர்பாக நீதிமன்ற நீதிபதியின் மகனோடு ஏற்பட்ட மோதல் காரணமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். தர்ஷன் கைது குறித்து நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். சென்னை முகப்பேர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருடைய வீட்டு பக்கத்தில் டீபாய் என்ற டீக்கடை இருக்கிறது. அங்கு டீ குடிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள்.

அப்போது தர்ஷன் ஜிம்முக்கு சென்று தன்னுடைய வீட்டிற்கு வரும்போது நீதிபதியின் மகன் தர்ஷன் வீட்டு வாசலை ஒட்டி காரை நிறுத்தியதால் தர்ஷனால் வீட்டிற்குள் போக முடியாமல் இருந்திருக்கிறது. அந்த சாலையில் அதிகமான போக்குவரத்து இருப்பதால் சாலையிலும் தன்னுடைய காரை நிறுத்த முடியாமல் தர்ஷன் 20 நிமிடங்களாக அந்த காரின் உரிமையாளர் யார் என்று தேடி அலைந்திருக்கிறார்.பிறகு தன்னுடைய தம்பியை வைத்து விசாரித்த போது பக்கத்து டீக்கடையில் இருந்த நபர்கள் இது என்னுடைய கார்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு கார் நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் தர்ஷன் தன்னை அடித்து அசிங்கமாக பேசினார் என்று அவர் மீது நீதிபதியின் மகன், மருமகள், அவருடைய அம்மா மூன்று பேரும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

நீதிபதியின் மகனும் அவருடைய மாமியாரும் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்தனர். அதேபோல தர்ஷன் தரப்பிலும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தர்ஷன் மற்றும் அவருடைய உறவினரை போலீஸ் நேற்று கைது செய்து அவரை ஜெயிலில் அடைத்திருக்கின்றனர். இது குறித்து தர்ஷனின் முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது அதில் விசாரணை கூட நடக்காமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்து இருக்கிறார்கள். விசாரணையே திங்கட்கிழமை அன்று தான் நடக்கும். ஹாஸ்பிடலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதியின் மகன் சொல்வது உண்மைதான் என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே. சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இல்லாமல் தெளிவு பெற முடியாது. கைது காலத்தை நீட்டிப்பதற்கு முன்பு சிசிடிவி காட்சிகளை வெளியிடவும். சரியான விசாரணை நடத்தவும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே தர்ஷன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சனம் ஷெட்டி புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *