பாலம் இடிந்து விழுந்ததில் 12 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரழந்துள்ளனர். சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் மீது மிகப்பெரிய இரயில்வே பாலத்திற்கானக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், பாலத்தின் மீது வேலைச் செய்து இருந்த 16 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
இதனைத் தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் விழுந்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் மீட்பு குழுவினர் படகுகள், ஹெலிகாப்டர் மற்றும் ரோபோக்கள் மூலமாகத் தேடும் பணிகளை மேற்கொண்டனர்.
பின்னர் மீட்பு குழுவினர் 12 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், 4 தொழிலாளர்களைக் காணவில்லை என்றுத் தெரிவித்தனர். இச்சம்பவத்தை அறிந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *