டம்மி முதலமைச்சருக்கு இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்டம் – கிளை – பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
சோபா மாடல் ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் பரந்தாமனை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றியதாகக் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு – மின்வெட்டு – விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் டம்மி முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

