வடகிழக்கு பருவமழை எதிரொலி – முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், துறைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.  மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத்துறை, மின் துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், முதலமைச்சர் விஜய் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *