சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி!!

Advertisements

சின்கியுபீல்ட் கோப்பை செஸ் ஐந்தாவது சுற்று போட்டிகளில் குகேஷ், பிரக்ஞானந்தா ஆட்டங்கள் சம நிலையில் முடிவடைந்துள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் ஐந்தாவது சுற்றில் இந்திய வீரர்களான உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இதில், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் வஷியர் லாக்ரேவ் இடையே நடந்த போட்டி சம நிலையில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், போலந்து கிராண்ட் மாஸ்டர் துடா ஜான் கிறிஸ்டாஃப் போட்டியும் சம நிலையில் முடிந்துள்ளது.

இதையடுத்து, ஐந்து சுற்றுகள் முடிவில், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா மூன்றரை புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன் தலா மூன்று புள்ளிகளுடன் உள்ளனர்.

குகேஷ், மேக்ஸிம் வஷியர் லாக்ரேவ், அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ ஆகியோர் இரண்டரை புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இப்போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *