சுவிஸ் ஓபன்: கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய செரண்டோலோ.!

ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஒபன் டென்னிஸ் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப்போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ உடன் மோதினார்.

இதில், சிறப்பாக விளையாடிய ஜுலான் மேனுவல் 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரூட்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றுப்போட்டியில்  ஜுலான் மேனுவல், ஜெர்மனியின் ரபேல் கொலிக்னான் உடன் மோதுகிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *