சமூகநீதி காவலர், ஒடுக்கப்பட்டோரின் குரல், வட்ட மேசை மாநாட்டு நாயகன்
திவான் பகதூர் அய்யா திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுத் தினம்… Rettamalai Srinivasan
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 1859 ஆம் ஆண்டு ஜூ லை 7ஆம் தேதி பிறந்தார், இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.இவர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி இதே நாளில் மறைந்தார்.இன்று அவருடைய நினைவுத் தினம்.
