இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்? சீமானின் ஆவேச பேச்சு!

Advertisements

எல்லாலும் நல்லா கேட்டுகோங்க எல்லாரும் நல்ல கேட்டுகோங்க வர இடைத்தேர்தல நானும் போட்யிடுறேன் நானும் போட்யிடுநேறன் ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க. ஆமாங்க நம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் நேரடியாக இடைத்தலில் மான் வேட்டைக்கு புலி கிளம்பிவிட்டது என்று  செய்தி அவர் நாவால் சீறி பாய்ந்திருக்கிறது. அவர் நாவால் சீறி பாய்ந்ததன் வார்த்தை சீற்றத்தை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட  அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை தழுவியது. இந்நிலையில்
தலைவர் சீமானுக்கு சட்டமன்ற தேர்தலிலே மக்கள் குதிரைக்கு கடிவாளம் போட்டும். தற்போது நான் இடைத்தேர்தலில் போட்டியிட்டே தீருவேனு கனைக்குதாம்.

அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசலை காரணமாக பயன்படுத்திக்கொண்டு 2026 மே 26 அன்று ராஜினாமா செய்துகொண்டு அதிகாரபூர்வமாக தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.

இதனால்  அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக உள்ள நிலையில், இங்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து சீமான் தற்போது பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியாக உள்ளது. இங்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் இதற்காக தயாராகி வருகின்றன. இதனிடையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக சீமான் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விஷயம் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் சொந்த தொகுதி என கூறப்பட்ட நிலையில், காரைக்குடியில் சீமான் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

நாதகவினரும் அவருடைய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் காரைக்குடி தொகுதியில் சீமான் தோல்வியை தழுவியது, அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.அதோடு தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக பெரியளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருக்கிறார் சீமான். அதே நேரம் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளின் பங்கேற்று நாதக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் கே.எம். கல்லூரியில் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் விழா மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சீமான் பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக இடைத்தேர்தல் சம்பந்தமாகவும் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் பேசுகையில், நான் ஒன்றும் மன்னன் கிடையாது.

மந்திரியின் மகனும் கிடையாது. கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கும். வான்னு சொன்னால் ஓட்டு போடுவதற்கும். இப்போது தோல்வி அடைந்திருந்தாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்கு செலுத்தியுள்ளனர். என்னை அந்த இடத்தில் போக வேண்டுமென் சொல்லி இருக்கிறார்கள்.

பாரதிராஜா அப்பாவுடைய முப்பதாவது காரியம் அன்று கூட, பக்கத்தில் என்னுடைய அப்பா வயசு உடையவர் தோளை தட்டுனார். மகனே நீ ஐம்பது பேரோடையாவது சட்டமன்றத்திற்குள் போய் விடுவாய்ன்னு ரொம்ப ஆசைப்பட்டுட்டு இருந்தேன். நடக்கலை. ஆனால் விட்ராத. இந்த இடைத்தேர்தலில் நின்னாவது எப்படியாவது உள்ளே போயிடுன்னு சொன்னார். நான் உறுதியா போய்றேன் சிரிச்சுட்டு சொன்னேன். பின்னாடி இருந்த இந்த சிரிப்போட போகனும் சொல்லி இன்னொருவர் சொன்னார் என பேசியுள்ளார்.

மேலும் இன்னும் நாலு வருஷம் கழிச்சு பாரு. என்னை ஒவ்வொருத்தனா தேடி வந்து, ஆளை கொண்டு வாப்பான்னு சொல்வான் பாரு என்றார். அவருடைய இந்த பேச்சு தற்போது பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் பரப்புரை சமயத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தவெக விஜய் பெரியளவில் விமர்சனங்களை வைக்கவில்லை. அப்போதே நாதக சீமான் , விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் திமுக, அதிமுக, நாதக தரப்பில் இருந்து சீமான் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை இருந்தாலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிட்டால், வெற்றி வாகை சூடுவாரா அல்லது வெத்து வேட்டா போரவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆக பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள்; பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். இந்த இடைத்தேர்தலில் இவரை தூக்கி எறிவார்களா என்பது உங்கள் கருத்தை  கமென்ட்ல் பதிவு செய்யவும்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *