காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்-அமைச்சர் கீதா ஜீவன்

காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக தூத்துக்குடியில் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தூத்துக்குடி லூர்த்தம்மாள் புரத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
நிகழ்ச்சியில் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,   காலை உணவு திட்டம் வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும் என  தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து, மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *