
அமைச்சர் சேகர்பாபு சரித்திர பதிவேடு குற்றவாளி என விமர்சித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலையை ஒரு டூப் போலீஸ் எனவும் லஞ்ச பேர்வழி என்றும் நானும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகலாமா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளதால் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அண்ணாமலை க்கும் இடையே ஏற்பட்டுள்ள பணிப்போர் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளின் தொடர் நிகழ்ச்சியாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டு முழுவதும் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றும் கூறினார்.திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை பெரும்பாலானோர் முட்டாளாகத்தான் இருக்கின்றனர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அதேபோல குற்றப்பின்னணியை கொண்ட திமுக அமைச்சர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையை பற்றி பேசுகிறார்கள் எனவும் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். குற்றப்பின்னனியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார் என தான் நம்புவதாகவும் படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை படிக்காத மா மேதை கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை களங்கப்படுத்துகிறாரா என்றும் அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார். கல்வி , மனம், மக்கள் சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தை கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள் என்றும் இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது எனவும் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபுவுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கடும் கருத்து மோதல் போக்கும் பனிப்போரும் ஏற்பட்டுள்ளதோடு குறிப்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு மேற்கொள்ளும் பல்வேறு புதிய மாற்றங்களினால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்பட பல பாஜக தலைவர்கள் அமைச்சர் சேகர்பாபுவை தொடர்ந்து விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
