
சுரங்கப்பாதையில் 10 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது. சுரங்கப்பாதையில் 10 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இடிபாடுகள் வழியாகச் செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாகக் கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர்.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்குக் குழாய்மூலம் உணவு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் மீட்புக்குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


