Chhattisgarh:துடிக்கத் துடிக்கப் பாட்டியைக் கொன்ற பேரன் -ரத்தத்தை சிவலிங்கத்தின் மீது பூசிய கொடூரம்!

Advertisements

பாட்டியைக் கொன்று, அவரின் ரத்தத்தைச் சிவலிங்கத்தின் மீது தடவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள நன்கட்டி என்ற கிராமத்தில் குல்ஷன் கோஸ்வாமி (வயது 35) என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தனது 70 வயதான பாட்டியை நாற்காலியில் கட்டி வைத்துக் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பிறகுத் தனது பாட்டியின் ரத்தத்தைச் சேகரித்து, அந்தப் பகுதியில் உள்ள கோயிலின் சிவலிங்கம் மீது “சிவன் இங்கே இருக்கிறார்” என்று ரத்தத்தால் எழுதியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து குல்ஷன் கோஸ்வாமி பாட்டியைத் தாக்கிய அதே ஆயுதத்தைக் கொண்டு, தன்னையும் தாக்கித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அப்போது இந்தச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம்குறித்து நந்தினி காவல் நிலைய காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, குல்ஷன் பாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குல்ஷனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து நந்தினி காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “ இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரிடம் உரிய விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம்குறித்த உண்மை தெரியவரும்” என்று கூறினார்.

பேரனே தனது பாட்டியைக் கொன்று, அவரின் ரத்தத்தைக் கொண்டு சிவலிங்கத்தின் மீது எழுதிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *