கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி..!

கரூரில் தவெக கூட்டத்தில் நேர்ந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இது குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரூரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்ததை அறிந்து சொல்லொண்ணாத் துயர் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் உள்ளோருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பத்து இலட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு ஒரு இலட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் குறித்து முறையாக விசாரணை நடத்தி அரசக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *