Chettinad Prawn Gravy: செட்டிநாடு இறால் கிரேவி!

Advertisements

செட்டிநாடு இறால் கிரேவி!

நீங்கள் பல வகையான கிரேவி ரெசிபிகள் சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி, நண்டு கிரேவி, மீன் கிரேவி இது போன்ற கிரேவி வகைகளைச் சமைத்து அலுத்துபோகிருக்கும். அதனால் சமைக்கும் தாய்மார்களுக்கும் கிரேவி பிரியர்களுக்கும் இன்றைய பதிவானது மிகவும் உதவியானதாக இருக்கும். செட்டிநாடு சமையல் என்றால் சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும். அத்தகைய செட்டிநாடு இறால் கிரேவி சூப்பரா செய்வது எப்படி என்றுதெரிந்துகொள்ளுங்கள்.

செட்டிநாடு இறால் கிரேவி செய்யத் தேவையான பொருட்கள்:

 


இறால்- 1/2 கிலோ
சோம்பு- 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 1/2 கப்
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 3
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கையளவு
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
சோம்பு- 1/2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
பூண்டு- 10 பல்
காய்ந்த மிளகாய்- 8
துருவிய தேங்காய்- 1/2 கப்


இறால் கிரேவி செய்முறை:

முதலில் நீங்கள் 1/2 கிலோ இறாலை எடுத்துக்கொண்டு தண்ணீரில் சுத்தமாக அலசித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயம் அனைத்தையும் நறுக்கி தனியாக வைத்து விடுங்கள்.அடுத்ததாக மேலே வறுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பைப் பற்ற வைத்துச் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள பொருட்களை அதில் போட்டுப் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

வறுத்த பொருட்களை 5 நிமிடம் ஆற வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்துகொண்டு அதில் ஆறவைத்த பொருட்களைப் போட்டுச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சோம்பு 1/2 ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக 10 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்.


10 நிமிடம் களித்து மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கிண்டி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மசாலாவுடன் எடுத்துவைத்துள்ள இறாலை அதில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து  விடுங்கள்.அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு இறால் கிரேவி தயார். இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *