Koyambedu vegetable prices:காய்கறி விலை கடும் உயா்வு!

Advertisements

சென்னை:கோயம்பேடு சந்தைக்குத் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கொண்டுவரப்பட்டு, மொத்த, சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே பருவமழை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாகக் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 200, பட்டாணி ரூ. 240, இஞ்சி ரூ. 170, பூண்டு ரூ. 330, அவரைக்காய் ரூ. 100, சின்ன வெங்காயம் ரூ. 100, வண்ண குடை மிளகாய் ரூ. 190-க்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேபோல, ஒரு கிலோ தக்காளி, பச்சைமிளகாய், பீா்க்கங்காய் ஆகியவை தலா ரூ. 75, ஊட்டிக் கேரட் மற்றும் பீட்ரூட், காராமணி, சேனைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.70, முள்ளங்கி ரூ. 50, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, புடலங்காய் ரூ. 45, எலுமிச்சை ரூ. 90, கட்டு புதினா, கொத்தமல்லி தலா ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *