வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 3,500-ஐ தாண்டியது.!

வெனிசுலா நாட்டைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,535 ஆக உயர்ந்துள்ளது, இது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் போதிலும், சுமார் 30,000 பேரை இன்னும் காணவில்லை என்பது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக உள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 17,854 பேர் தற்போது திறந்தவெளியில் தங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தட்டுப்பாடாக இருப்பதால், சர்வதேச நாடுகளின் உதவியை வெனிசுலா அரசு தீவிரமாக நாடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *