Chennai Marina Beach: கடலில் குளிக்கத் தடை!

Advertisements

சென்னையில் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் கடலில் குளிப்பதை தவிர்த்து ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் காவல்துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.

நாளைக் காணும் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில் சென்னை பெருநகர காவல் சார்பாகப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளைக் குறித்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ர கர்க், மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்,

அப்போது பேசியேமேற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, நாளைக் காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது அதற்காகப் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரும்பொழுது கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை… குறிப்பாகப் பொதுமக்கள் மணல் பரப்பிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை முழுவதும் 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாகக் குடும்பத்தோடு கடற்கரைக்கு வரும் நபர்கள் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக 12 வாய்ஸ் டவர்கள் போடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்குக் கையில் டாகும் அணியப்படும்.

இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் யாருக்கும் அனுமதியில்லை ஏற்கனவே அடையாறில் உள்ள ட்ரோன் கேமரா மூலமாகக் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனகூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்துகூடுதல் ஆணையர்  சுதாகர்:கடந்த புத்தாண்டு விபத்து இல்லாத ஒரு புத்தாண்டு ஆகக் கொண்டாடப்பட்டது அதேபோல் விபத்து இல்லாத காணும் பொங்கல் நாளைக் கொண்டாடப்பட வேண்டும்… பொதுமக்கள் நாளைக் கடற்கரைக்கு வரும்போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் மட்டும் அவருடைய வாகனங்களை நிறுத்த வேண்டும்…. குறிப்பாகக் காமராஜர் சாலையில் மட்டும் தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் இருக்கக்கூடும்.

கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்தப் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் 3168 கேமராக்கள் மூலமாக முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது…

இதனிடையே இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாகப் பயணம் மேற்கொண்டாலோ வீலிங் செய்தாலோ அவர்களைக் கண்காணித்து அவர்களிடம் உள்ள வாகனங்கள் பரிமுதல் செய்யப்படும்

இந்த நிலையில் நாளைப் பொங்கல் விடுமுறை முடிவடைவதால் வெளியூரிலிருந்து வரக்கூடிய நபர்கள் நேரத்துக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ள வேண்டும். அதே போன்று வெளி ஊரிலிருந்து சென்னை வரக்கூடிய மக்கள் அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் அந்த நெரிசல் தொடர்பாகச் சோசியல் மீடியாவில் பகிரப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *