
திருவொற்றியூர் மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில் ரூபாய் 75 லட்சத்தில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணியினை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர். மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தனர்.
சென்னை: தண்டையார்பேட்டை கருணாநிதி நகரில் நான்கு தெருக்கள் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பறிக்கப்பட்டது. தற்போது சாலை பள்ளமாகவும் வீடுகள் உயரமாகவும் உள்ள காரணத்தால் வீடுகளுக்கு தண்ணீர் வருவது பிரச்சினையாக உள்ளது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சட்டமன்ற உறுப்பினர் எபினேசரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் மாநகராட்சி குடிநீர் வாரியம் சார்பில் 75 லட்ச ரூபாய் ஒதுக்கி கருணாநிதி நகரில் உள்ள ஒன்று இரண்டு மூன்று நான்கு தெருகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
இதனை சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதி நகரில் முக்கிய சந்திப்புகளில் மினி ஐ மாஸ் விளக்கு 10 பொருத்துவதற்காக 11 லட்ச ரூபாய் மாநகராட்சி தெரு விளக்கு பிரிவு சார்பில் தொடங்குவதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
அதன்படி இதனை சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் பணிகளை விரைவில் முடித்து தர ஒப்பந்ததாரர்களிடம் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஆர்கே நகர் திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வட்டச் செயலாளர் சுந்தர் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

