Advertisements
மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆஅம் தேதி மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இந்நிலையில், மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு கோயில் நடையை திறந்து வைத்துத் தீபம் ஏற்றினார்.அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கு வருகை தந்துள்ளனர்.காவல்துறையினரின் பாதுகாப்பது ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.