சென்னை போரூரில் 70 வயது மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள்..!

Advertisements

சென்னை போரூர் ஆர்.இ நகர் பகுதியில் வசித்து வருபவர் காந்திமதி(70). இவர் நேற்று இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.பின்னர் இது குறித்து எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் இறந்த நிலையில் சடலமாக கிடந்த மூதாட்டியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மூதாட்டி கழுத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த நகையும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.அதேபோல் மூத்தாட்டியின் வீட்டில் வாடகைக்கு இருந்த அஜய் என்ற வாலிபர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து திண்டிகல்லில் இருந்த அஜயை காவல்துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர்.

இதில் அஜய் அவரது தாய் மற்றும் சகோதரி மூவரும் வாடகைக்கு வீட்டில் குடியிருந்து வந்ததும்.அஜய்யின் தந்தை அவர்களை விட்டுச் சென்ற நிலையில் அஜய்யின் தாய்க்கு வேறொருவர் ஆணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜய்யின் வீட்டுக்கு தாயின் ஆண் நண்பர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.சம்பவத்தின் போது அஜய் அவரது நண்பர் இருவரும் இருந்துள்ளனர்.

அப்போது மூதாட்டி காந்திமதி அஜய்யிடம் வீட்டை காலி செய்யும்படி திட்டியுள்ளார்.அதற்கு வாடகை அட்வான்ஸ் தொகைதொகையை கேட்டுள்ளார். மேலும் அஜய்யின் தாய் குறித்து தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அஜய் மூதாட்டியை கீழே தள்ளியுள்ளார்.இதில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த மூதாட்டியை அவரது நண்பர் உதவியுடன் வீட்டின் ஹாலில் புடவையால் தூக்கில் ஏற்றிவிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது போல நாடமாடியுள்ளனர்.மேலும் தப்பி செல்வதற்கு செலவிற்காக மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

தங்க சங்கலியை ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் அடகு வைத்துவிட்டு அங்கிருந்து திண்டுகல் சென்றுள்ளனர்.இதையடுத்து அஜய் அவரது நண்பன் அன்வர் ஆகியோரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.இந்த வழக்கில் முதலில் தற்கொலை என நினைந்த காவல்துறை தற்கொலை செய்து கொள்பவர்கள் வீட்டின் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொல்வது வழக்கும் ஆனால் பாட்டி ஹாலில் தூக்கில் தொங்கியபடி இருந்ததால் காவல்துறை இது கொலையாக இருக்கும் என கணித்து விசாரணைதை துவக்கினர்.

அதேபோல் நகைக்காக கொலை நடந்து இருக்காது என கனித்தனர்.பொதுவாக நகைக்காக கொலை செய்பவர்கள் அணிந்து இருக்கும் அனைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து செல்வார்கள். ஆனால் கழுத்தில் இருந்த நகை மட்டும் கொள்ளை போய் இருந்தது. மூதாட்டி காது மூக்கில் அணிந்து இருந்த நகைகள் அப்படியே இருந்தது. இதனால் இந்த கொலை நகைகாக கொள்ளையர்கள் செய்தது இல்லை என்பதை உணர்ந்த காவல்துறை மூதாட்டியின் உறவினர்கள் வீட்டை சுற்றி இருப்பவர்களை விசாரணை செய்தனர்.இதில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *