Karaikal : தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

Advertisements

காரைக்காலில் தொடர் மழை பெய்ததால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருவதால் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று இரவு நகரப்பகுதி மற்றும் நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

.மேலும் காரைக்காலுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *