Mohammad Irfan: கோலி இல்லாமல் இந்திய அணி வெல்லாது.. பாக்.முன்னாள் வீரர் கருத்து!

Advertisements

வரும் ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் விராட் கோஹ்லிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்க்கு கோஹ்லி இல்லாமல் இந்திய அணியை உருவாக்க முடியாது எனப் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் கூறியுள்ளார்.

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி. அண்மையில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஆடவில்லை. கோஹ்லி-அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்ததால் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார். வரும் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் கோஹ்லி களம் இறங்குகிறார். விரைவில் அவர் அணிஆர்சிபி அணியில் இணைவாரெனத் தெரிகிறது. இதனிடையே வரும் ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் விராட் கோஹ்லிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மிகவும் மெதுவாக இருக்கும். எனவே நங்கூரமாக நின்று மெதுவாக விளையாடக்கூடிய கோஹ்லியின் அணுகுமுறை அங்குப் பொருந்தாது எனத் தேர்வு குழுவினர் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட், இந்தியா கழற்றிவிட நினைத்தாலும் உலகின் சூப்பர் ஸ்டார் வீரராகக் கருதப்படும் கோஹ்லியை, ஐசிசி விளையாட வைக்கும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில், “இந்தச் செய்தி உண்மையாக இருக்க முடியாது. விளையாட்டை ரசிகர்களின் பார்வையில் வளர்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஐசிசி வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கோஹ்லி உலகில் எந்த வீரரையும் விட மகத்தானவர். எனவே அவர் கண்டிப்பாக அந்த உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதேபோல் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான், கோஹ்லி இல்லாமல் இந்திய அணியை உருவாக்க முடியாது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். அவர் இந்தியாவுக்காக 3-4 போட்டிகளில் தனியாக நின்றுஆடி வெற்றியைத் தேடித்தந்தார். அவர் டி20 உலகக் கோப்பை அணியில் அவசியம். ஏனெனில் அவரால் தனிநபராகப் போட்டிகளை வெல்ல முடியும். டி20 உலகக் கோப்பையில் அவரின் இடத்தைப் பற்றிக் கேள்வி கேட்பவர்கள் கல்லி கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள், எனச் சாடி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *