Chandrashekar Rao: சந்திரசேகர ராவ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertisements

தெலுங்கானா: தெலுங்கானாவின் மொத்த செல்வமும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது எனக் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, அதற்குப் பிறகான 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் நடைபெறாத தெலுங்கானாவில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இங்குள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை பிஆர்எஸ் கட்சி கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. கர்நாடகாவை போல இங்கும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காங்கிரசை தோற்கடிக்க பி.ஆர்.எஸ், பாஜக, மற்றும் எம்.ஐ.எம். கட்சிகள் சதி செய்கின்றன. அந்த மூன்று கட்சிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கின்றன.

ஓவைசியின் கட்சி எங்கு எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்கிறது. பாஜகவுக்கு எதிராகக் கே.சி.ஆர் போராடியிருந்தால் அவர்மீது ஏன் இ.டி. மற்றும் சி.பி.ஐ வழக்குகள் இல்லை. இதன் மூலம் பாஜகவும் பிஆர்எஸ்சும் ஒரே கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்றுவருகிற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு எதிராகப் போராடுகிறேன்; ஏன் மீது 25-30 வழக்குகள் உள்ளன. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். நவம்பர் 30ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெலுங்கானாவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியுள்ளார் பேசியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *