
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்ருக்கு கண்டனம்!
புதுச்சேரியில் சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பல்வேறு புகார்களை முன்வைத்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சந்திர பிரியங்காவிற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில்: இந்த ஆட்சியில் பாலின பாகுபாடு யாரிடமும் இல்லை என்றும் அமைச்சராக இருந்தபோது சந்திர பிரியங்கா சிறப்பாகச் செயல்படவில்லை. ஒரு அமைச்சரை நீக்குவதற்கு முதல் அமைச்சருக்கு உரிமை உண்டு. சந்திர பிரியங்காவின் ஆதாரமற்ற புகாருக்குப் பதில் சொல்ல முடியாது எனச் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதேபோலப் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சந்திர பிரியங்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.ஆர்.காங் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்நான் நல்லவர் என யாரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களது முதலமைச்சருக்கு இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் தான் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரெனப் பொதுப்பணித்துறை அமைச்சர்லட்சுமி நாராயணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

