
150 போன் அழைப்புகளுக்கு பதில் தராத மனைவியை 230 கிலோ மீட்டர் தூரம் சென்று கொடூரமாக கொன்ற கணவன்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் காவலராக பணிபுரியும் கிஷோர் , தனது மனைவி பிரதீபாவை கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. மனைவி பிரதீமாவுக்கு 11 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றவர் அங்கு இருந்துள்ளார். கணவர் கிஷோர் போன் மூலம் மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 150 முறை மனைவிக்கு இடைவிடாது போன் செய்துள்ளார். பிரதீமா போனை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மாமியார் வீடு அமைந்துள்ள சமராஜ்நகருக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி கழுத்தை துப்பட்டாவால் நெரித் துள்ளார். கிஷோரும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். பிரதீமா கடந்த திங்கட்கிழமை இறந்த நிலையில் கிஷோரும் ஆபத்தான நிலையில் கோளாரில் உள்ள தமக்ரா மருத்துவமனையில் அவராகவே சென்று சேர்ந்துள்ளார்.
அவரும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஹொஸ்டோக் காவல் துறை அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு நவம்பர் 13 -ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. பி இ கம்ப்யூட்டர் பட்டதாரியான இவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


