
நடந்து சென்ற பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் நகை பறிப்பு!
நத்தம் அருகே வேலாயுதம்பட்டி- காரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). இவரது மனைவி ரேணுகாதேவி (35). வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். Chain Snatching
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிசங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். Chain Snatching
இதுகுறித்து நத்தம் போலீசில் ரேணுகாதேவி புகார் அளித்தார். அதன்பே ரில் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகிறார். Chain Snatching



