Narcotics smuggler: கடத்தல் மன்னன் கைது!

போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் கைது!

சென்னை: மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டிலை மும்பை தனிப்படை போலீஸ் சென்னையில் கைது செய்தனர். 2020ல் ரூ.20 கோடி மதிப்புடைய 20 கிலோ போதைப் பொருளைக் கடத்தியது தொடர்பாக லலித் பாட்டில் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதை பொருளை, லலித் பாட்டில் பயோடெக் கம்பெனியில் தயாரித்தது அமபலமானது.

சிறையிலிருந்து கொண்டே ஐபோன் மூலம், லலித் பாட்டில் போதை பொருள் சாம்ராஜ்யத்தை இயக்கியது விசாரணையில் தகவல் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி மும்பை சிறையிலிருந்து சிசிச்சை பெற மருத்துவமனை வந்தபோது லலித் பாட்டில் தப்பியோடினார். குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்த லலித் பாட்டில், சென்னைக்கு வந்து பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். லலித் பாட்டிலின் செல்போன் சிக்னலை வைத்து, மும்பை போலீஸ் சுற்றி வளைத்துப் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *