2023 Asian Games: வேட்டையை தொடங்கியது இந்தியா!

ஆசிய நாடுகளுக்கிடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது…

ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. ஹாங்சோவில் வண்ணமயமான  பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சீன அதிபர் ஜீ ஜின் பிங்   தலைமையில்   தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என மொத்தம் 45 நாடுகள் பங்கேற்கின்றன. 40வகையான விளையாட்டுகளில் 61 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும்.  மொத்தம் 56 இடங்களீள் போட்டிகள் நடைபெறும். 12 ஆயிரம்  வீரர், வீராங்கனைகள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். அது தவிர பயிசியாளர்கள், அலுவலர்கள் , உதவியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வருகிறது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

10 மீட்டர்  ஏர் ரைஃபில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான படகு துடுப்பு போட்டியில் அர்ஜூன் லால், அரவிந்த்  சிங்ஹ் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. கால்பந்து ஆண்கள் பிரிவில் குரூப் ஏ சுற்றில் இந்தியா – மியான்மர் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தது. இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி சமனில் முடிந்தது.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் 16- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, 3- 0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *