
ஆத்தூரில் அரிசி கடை மற்றும் பாமாயில் கடையில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாணத்தோடு திருடும் சிசிடிவி காட்சிவெளியாகிவைரலாகிவருகிறது. சிசிடிவிகாட்சிஅடிப்படையில்போலீ சார்விசாரணைநடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கணேசன் மகன் அன்பழகன் என்பவர் பாமாயில் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையின் அருகில் செந்தில்குமார் என்பவர் அரிசி கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் இருவரும் கடையை இரவுக் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அன்பழகன் காலையில் மீண்டும் கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது கல்லாப்பெட்டியில் பார்த்தபோது அது உடைக்கப்பட்டு அதிலிருந்து மூன்று லட்சத்தி 62 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து செந்தில்குமார் அரிசி கடையிலும் மேற்கூறையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் அவரது கடையில் இருந்த 23 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் வெளியில் இருந்த மரத்தின் வழியாக இளைஞர் ஒருவர் மேலே ஏறி மேற்கூறையை பிரித்து அரை நிர்வாணத்தோடு ரொக்கத்தை திருடும் காட்சி இருந்துள்ளது.இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

