Lok Sabha Elections 6 Phase : 9 மணி நிலவரப்படி 10.82 சதவிகித வாக்குகள் பதிவு!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புதுடெல்லி:நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: புதுடெல்லி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கினை செலுத்தினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *