Caste wise census: தொடக்கம்!

Advertisements

சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடக்கம்.

பீஹார் அரசாங்கம் அக்டோபர், 2-ஆம் தேதி சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகீய இரு பிரிவினரும் சேர்ந்து மொத்த மாநில மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் உள்ளனர். பிற்படுத்தபட்டோர் 36 சதவீதம், மற்ற பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதம், 19.65 சதவீதம் எஸ்சி  வகுப்பினரும், 14 சதவீதம் யாதவ், 3 சதவீதம் மஷாராஸ் வகுப்பினரும், 3.65 சதவீதம் பிராமணர் சமூகத்தினரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து பீஹார் முதல்வர் நித்திஷ் குமார் கூறுகையில், 2024 -ல் வரப் போகும் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும், அது தவிர இப்போதைக்கு நடைமுறைப்படுத்தும்  நோக்கமல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்திய, மக்கள்தொகை புள்ளியல் துணை இயக்குநர் தேஜஷ்வி யாதவுக்கு நன்றி கூறியதோடு, வரலாற்று சிறப்பு  மிக்க  பணி என்றும் பெருமிதம் கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *