Leo: 5 ஆம் தேதி வெளியாகும் ட்ரெய்லர்!

Advertisements

லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி இருக்கும் லியோ படம்    இசை வெளியீடு நிகழ்ச்சியைக் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு மிக ஏமாற்றமளிக்கும் செய்தி வந்து சேர்ந்தது. இந்த நிலையில்  ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமாகக் காத்திருந்த லியோ படத்தின்  ட்ரெய்லர் தான் இந்தப் புதிய அப்டேட்.

லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் தகவலுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரும் ரசிகரகளை பரபரக்க வைத்துள்ளது. கழுடைப்புலி எதிரில் வெறிகொண்டு நிற்க ஆயுதத்துடன் ரத்தம் சிந்த அதன்மேல் பாய்கிறார் விஜய்.  லியோ படத்தின் இந்தக் காட்சி விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைய செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *