
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி சேவை செய்து வழிபாடு செய்துள்ளார்.
ஸ்ரீ ஹர்மந்தர் சாஹிப் என்று அழைக்கப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில், சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களின் புனித ஸ்தலம் ஆகும்.ஆண்டுதோறும் பல லட்ச மக்கள், இந்தக் கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். எம்மதமும் இங்குச் சம்மதமாக இருப்பதே இக்கோயிலின் சிறப்பு அம்சம்.
இக்கோயிலுக்கு வருபவர்களின் பசியை போக்க, சத்தான சைவ உணவு வழங்கப்படுகிறது. லங்கர் எனப்படும் சாப்பிடும் கூடத்தில், தினமும் சுமார் 50,000 நபர்களுக்குச் சாப்பாடு வழங்கப்படுகிறது. கோயிலில் கொடுக்கப்படும் உணவும், அதன் பாத்திரங்களும் சுத்தமாக வைக்கப்பட்டு வருகிறது.

மனிதர்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வதற்கு சமம் என்ற கோட்பாடை கொண்ட சீக்கிய மக்கள், உணவு சமைப்பது, உணவு பரிமாறுவது, பாத்திரம் விளக்குவது போன்ற வேலைகளை, அவர்களின் விருப்பப்படி செய்கிறார்கள்.
சமத்துவத்தை நிலைநாட்ட, ஏழை எளியோர் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரும் இந்தக் கோயிலில் சமமாக நடத்தப்படுகிறார்கள்.அந்தவகையி
பொதுமக்களுடன் சேர்ந்து பாத்திரம் விளக்கியுள்ளார்.இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல்.“இன்று பொற்கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பிற்கு சென்று என் சேவையைத் தொடங்கினேன்.” என்று பதிவிட்டுள்ளார் ராகுல்.




