ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதுகிறது.!

 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும், பஞ்சாப் அணி 5வது இடத்திலும்  உள்ளது.
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *