பெண்ணிடம் அத்துமீறிய கார் பயிற்சியாளர் கைது!

சென்னை: 

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் சட்டக் கல்லூரி​யில் முதலா​மாண்டு பயின்று வருகிறார். இவர், அதே பகுதி​யில் உள்ள கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி​யில் ஓட்டுநர் பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தார். அங்குத் திருவேற்காடு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த சித்திரை செல்வம் (37) பயிற்சியாளராக உள்ளார்.

அவர் கார் ஓட்டச் சொல்லிக்கொடுப்பதுபோல் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தை​யிடம் தெரி​வித்​துள்ளார். அவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். புகாரின் பேரில், போலீ​ஸார் 2 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து சித்திரை செல்வத்தைக் கைது செய்​து​விசாரிக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *