முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிமுறைகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வொப்பந்தங்களை வழங்குவதற்காக ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும் சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி அவர்கள் மீது புகார் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதன் விளைவாக இதுபோன்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது விசாரணை நடத்தி எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



