ரூ.15 கோடி பேரம் ….முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அதிமுக, திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது., தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறு மாத கால ஆட்சி தமிழ்நாடு மக்களுக்கு தமிழக முதலமைச்சர் பல நல்ல திட்டங்களை தந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடித்தே பழகிவிட்டதாகவும், அவரை முன்னிறுத்திக் கொள்வதற்காக வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருப்பதாகக் கூறினார். சீமான் இரட்டை வேடம் போடுவதாகவும், கெட்டுப்போன பிரியாணி கொடுத்தாலும் சாப்பிட தயாராக இருப்பதாகவும் விமர்சித்தார். அதிமுக, திமுக வினர் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் தனக்கும் கைப்பேசியில் தொடர்பு கொண்டு 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்ததாகவும், கூறினார். 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *