Canada: மனைவியைக் கொலை செய்துவிட்டு தனது தாய்க்கு போன் செய்த கணவன்!

Advertisements

பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங்-பல்வீந்தர் கவுர் தம்பதிக்குக் கடந்த 2000-ம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார்.

அதே சமயம் ஜக்பிரீத் சிங் வேலை இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளைப் பார்க்க அவர் கனடா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி ஜக்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனது தாயிடம் வீடியோ கால்மூலம் பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த பல்வீந்தர் கவுரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பல்வீந்தர் கவுர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜக்பிரீத் சிங்கை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஜக்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக இருந்து வந்ததாகவும், இந்தச் சம்பவம்குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *