Sivaganga: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

தேவகோட்டை அருகே போலீசாரை தாக்கி விட்டுதப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியைத் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.அவர்களைப் பிடிக்கப் போலீசார் SP தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்றைய முன்தினம் தேவகோட்டை தென்னீர்வயலை சேர்ந்ததினேஷ் குமார், மற்றும் கல்லுவழி கிராமத்தைச் சேர்ந்த கணபதி ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்து இருந்த இடங்களை அடையாளம் காண போலீசார் தினேஷ்குமாரை தேவகோட்டைக்கு வேனில் அழைத்துச் சென்றனர்.அப்போது முக்கூரணி என்ற இடத்தில் பறிமுதல் செய்து கொண்டு வந்த இரும்பு கம்பியை எடுத்து, சார்பு ஆய்வாளர் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார்.இதனைச் சிறிதும் எதிர்பாராத காவல் ஆய்வாளர் ஆடிவேல் குற்றவாளி தப்பி விடாமல் இருக்க துப்பாக்கியால் காலில் சுட்டார்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷ் குமாரை மீட்டு, சிகிச்சைக்காகத் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

குற்றவாளிதாக்கியதில்காயம்அடைந்தசார்புஆய்வாளர்அதேமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் காலில் துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளிமேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *