Balveer Singh IPS : குற்றப்பத்திரிகை தயார்!

Advertisements

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த குற்றப்பத்திரிகை தயார்.

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் பல்களை பிடுக்கி கொடுமைப்படுத்திய புகாரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறபட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பல்வீர் சிங் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வீர் சிங்கிற்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அருண்குமார் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வீர் சிங்கிற்கு எதிராக விசாரணை முடிந்ததாகவும், அவர்மீது விசாரணை நடத்த குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும், பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வீர் சிங் சிறப்பு அதிகாரியாக இருந்ததுடன், ஐபிஎஸ் தகுதியில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதியும், யுபிஎஸ்சி அனுமதியும் தேவைப்படுகிறது.

இதனால் பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இடம் வழக்கு விசாரணை நகளையும், பல்வீர் சிங்கிற்கு எதிரான குற்றப்பத்திரிகையும் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *