அதிமுக கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்ட மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதிய அழுத்தம் கொடுத்த டங்ஸ்டன் சுரங்கத்தைத் தடுக்கத் தவறியதாகத் தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் மாநில அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக அ.தி.மு.க. பொழுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஃபெஞ்சல் புயல் பாதிப்பின்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லையெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பார்முலா 4 பந்தயம், பேனா நினைவுச் சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* குடிமராமத்து திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கோதாவரி – காவிரி, பரம்பிகுளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களைத் தொடர தவறிய தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்து நியாயமாகத் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கத் தி.மு.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வைப் பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்குவோம் என்றும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,000 பேரும் கலந்துகொண்டனர். அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *