My Lai massacre: பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை!

‘மை லாய் ‘படுகொலை!

மை லாய் படுகொலைகள் என்பது தெற்கு வியட்நாமில்  1968, மார்ச் 16-ல் நடைபெற்ற ஒரு சோகமான நிகழ்வாகும். அமெரிக்கப் படைகளினால்  இப்படுகொலை நிகழ்த்தப்பட்டது, இதில் ஆண்களைவிடப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம். கொல்லப்பட்ட இடம் சோன் மைக்கிராமம், தெற்கு வீயட்நாம். அமெரிக்க ராணுவத்தின் அமெரிக்கல் பிரிவு இரண்டாம் வெப் வில்லியம் கேலி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலான் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். உடல்கள் மோசாமாகச் சிதைக்கப்பட்டு கொடூரமாக இருந்தது. மொத்தமாக 26 அமெரிக்க  போர் வீரர்கள் குற்றத்தில் ஈடுபட்டாலும், இரண்டாம் வெப் வில்லியம் கேலி நடத்தியதாக அவருக்கு மட்டுமே  தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு, பின்னர்  மூன்று ஆண்டுகளாகக்  குறைக்கப்பட்டு, அதையும் வீட்டிலேயே கழித்தார்.

இப்படுகொலை அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியது. வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் கொடுஞ்செயலுக்கு அமெரிக்காவிலேயே  கூடக் கடுமையான விமர்சனங்கள்  முன்வைக்கைப்பட்டன.


டிசம்பர் 1967-ல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க படைகள் வந்து இறங்கினாலும், அப்போது எந்த வொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் கண்ணிவெடிகள் வைத்து அமெரிக்க படைகள் தாக்கப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் இறந்தனர்.

வஞ்சம் தீர்க்க எண்ணிய அமெரிக்கா படைகள் வியட்நாம்  மீது தாக்க ஆக்ரோஷத்துடன் களம் இறங்கியது. இது சோன் மைக்கிராமத்தில் நடந்தது. கேணல் ஓரன் ஹெண்டர்சன்’ என்பவர் கிராமத்தில் அனைவரையும் கொன்று விடும்படி உத்தரவிட்டார். அதன்படி காலை 7.00 மணிக்கே சோன் மைக்கிராமத்திற்குள் நுழைந்த அமெரிக்க படைகள், முதலில் ஹெலிகாப்டர் தாக்குதலைத் தொடங்கியது. பிறகு கண்ணில் பட்ட  அனைத்தையும்  தானியங்கி பீரங்கிமூலம் குருவியைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளினர்.

இரண்டாம் லெப்டினெண்ட் வில்லியம் கிலி தலைமையில் இது நடைபெற்றது. ஒரு கிராமம் கூட மிஞ்சக் கூடாது என  வெறியோடு வேட்டையாடினார் கிலி.இந்தப்  படுகொலை அனைத்தும் ஆண்கள் சந்தைக்குச் சென்றிருந்த சமயம் நடந்தது. பெண்கள், மற்றும் கைக் குழந்தைகள் அனைவரும் வசமாகச் சிக்கினர். மை லாய் எனும் இடத்தில் ஒரே குவியலாகப் போட்டுச் சென்றது  கிலி அனுப்பிய படை. 28 பேர் கொல்லப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கானோர் அநியாயமாகக் கொன்று குவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *