
கொடைக்கானல் சாலையில் டிப்பர் லாரியும் தனியார் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்திலிருந்து 100 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணைத் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்தில் சிறு சிறு காயம் அடைந்த 10கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டம்டம் பாறை என்ற இடத்தில் கொடைக்கானல் சாலையில், கொடைக்கானலிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி அதி வேகமாக வந்த டிப்பர் லாரியும், வத்தலகுண்டிலிருந்து கொடைக்கா
இந்த விபத்தின்போது தனியார் பேருந்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த நித்தியா என்ற பெண் தூக்கி வீசப்பட்டு 100 அடி பள்ளத்தில் விழுந்தார். மேலும் பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
100 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணைத் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து படுகாயங்களுடன் இருந்த நிலையில் கயிறுக் கட்டி மேலே தூக்கி வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் ஏற்பட்டவர்களை பெரியகுளம் மற்றும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் உருண்டு விழுந்து இருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு தேவதானப்பட்டி காவல்துறையினர் இந்த விபத்துகுறித்து விசாரணை மேற்கொண்டதோடு கொடைக்கானல் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீட்டப் பின்பு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

