
சென்னை:
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்ரீதிகா சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்களுடைய திருமணம்குறித்து இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. அதையெல்லாம் தாண்டித் தற்போது இந்தத் தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.
சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்குப் பிரபலம் கொடுத்தது நாதஸ்வரம் சீரியல் மலர் கேரக்டர்தான். அந்தச் சீரியல் மூலமாகத்தான் சின்னத் திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் உருவாகி இருந்தனர்.
நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து தொடர்ச்சியாகச் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரோடு மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆரியனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு விவாகரத்து முடிந்து விட்டது.
ஆரியனும் சன் டிவி சீரியல் நடிகை ஒருவரை தான் காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து இருந்தனர்.
அதுபோல ஆரியனின் திருமணத்தில் ஸ்ரீதிகா கணவரோடு கலந்து கொண்டார். இப்போது இருவரும் முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்திருந்தனர்.
இது சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் காதலித்ததால்தான் முதல் திருமணத்திலிருந்து விலகி விட்டார்கள் என்று எல்லாம் வதந்திகள் பரவி வந்தது.
அதற்கெல்லாம் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் விளக்கம் கொடுத்திருந்தனர். தாங்கள் இருவருமே தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் சொல்லியிருந்தனர்.
அதுபோல ஆரியன் மற்றும் ஸ்ரீதிகா இருவருமே தங்களுடைய முதல் தம்பதிகள்குறித்து எந்த இடத்திலும் குறை சொல்லியது கிடையாது.
இந்த நிலையில் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை நேற்று தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இந்தத் தம்பதிக்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் முகத்தைக் காட்டாத பலர் இவர்கள்குறித்து விமர்சனங்கள் எழுப்பி வந்த நிலையில் இவர்கள் இருவரும் அதிலிருந்து மீண்டு வந்து தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அதோடு ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பெரிய சக்தியுடன் பெரிய பொறுப்பு வருகிறது.
எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடர்கிறது. எனவே நாங்கள் இப்போது பெற்றோர் ஆகி நம் வாழ்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் நுழைகிறோம்.
எல்லாம் வல்ல இறைவனின் அனைத்து ஆசீர்வாதங்களுடன் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறோம்.
எங்களுக்குச் சமூக ஊடக நண்பர்களும், குடும்பத்தினரும் நிபந்தனை அற்ற அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். உங்களைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு இல்லை என்பது போன்று அந்தப் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
இந்தத் தம்பதிக்குச் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
