
டெல்லி:
நாடாளுமன்றத்தில் 2025- 2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளைத் தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ள நிலையில் நாளைப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவர் தொடர்ந்து 8ஆவது முறையாகப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தப் பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூ 10 லட்சம்வரை வருமான வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. புதிய வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு இருந்தாலும் கூட வரி சலுகை எதுவும் கிடைக்காது.
இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்ஃபு திருத்தம் உள்ளிட்ட 62 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் தொடங்கப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டம் உள்ளிட்டவை குறித்து பிரச்சினைகளைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல் அவையை நடத்த விடாமல் முடக்கவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டில் புதிய பொருளாதார உத்திகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
