Salem:சுற்றுலா அழைத்துச் சென்று மாணவி பலாத்காரம்..மூவருக்கு காப்பு!

Advertisements

சேலம்:சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (22), இவர் சேலம் டவுன் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீரமணி 16 வயதான பிளஸ்-1 மாணவியைக் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு வெளியில் சென்றார். அப்போது அந்த மாணவியை வீரமணி தனது மோட்டார் சைக்கிளில் கொல்லி மலைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர்.

பின்னர் அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்த மாணவியுடன் வீரமணி தங்கினார். பின்னர் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டுச் சென்றார்.

10th Class Student Gang Rape

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியைக் கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலாத்காரம் செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவியரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திச் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாணவிக்குச் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *