
2023 பாக்ஸ் ஆபீஸில் கலெக்சன் அள்ளிய தமிழ் படங்களும் & ஒ டி டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களும் ஒரு பார்வை!
ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ஒவ்வொரு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்து வருகின்றன. அதை நிரூபிக்கும் பொருட்டு 2023 ஆம் ஆண்டிலும் பல திரைப்படங்கள் வெளியாகி திரைத்துறைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே போல திரை அரங்கங்கள், ஓ டி டி தளங்களும் இந்த படங்கள் மூலம் பெருத்த லாபத்தை பார்த்து உள்ளன.
பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் மக்கள் மத்தியில் சமமான வரவேற்பை பெற்றன. இது பல புதிய படைப்பாளிகளுக்கு நம்பிக்கை கீற்றை ஒளிர வைத்து உள்ளது. குறிப்பாக, கன்டன்ட் [content] தான் கிங் [king] என்பதை இந்த வருடம் வெளியாகிய படங்கள் உரக்க உணர்த்தி உள்ளன.
மேலும், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என இப்படி நட்சத்திர நடிகர்கள் படங்கள் மட்டும் இல்லாது பல குறுகிய பட்ஜெட் படங்களும் கல்லா கட்டி சிறந்த விமர்சனங்களை அள்ளி சென்றது. அப்படி, இந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில அதிகம் கலெக்சன் அள்ளிய படங்களும், ஒ டி டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் குறித்து பார்ப்போம் :
கலெக்சன் அள்ளிய படங்கள்:
லியோ, ஜெயிலர், பொன்னியின் செல்வன் 2, வாரிசு, துணிவு, வாத்தி, மார்க் ஆன்டனி, மாவீரன், மாமன்னன், போர் தொழில் ஆகிய படங்கள் வசூலில் இந்த வருடம் கொடி நாட்டின.
ஓ டி டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்:
இந்த பட்டியலில் துணிவு முதல் இடத்தையும், வாத்தி, கட்டா குஸ்தி, டி எஸ் பி, ராங்கி போன்ற படங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளன. மேலும், பொதுப்படையாக கூறினால் குறைந்த பட்ஜெட் படங்களே எதிர்பாராத லாபத்தை பார்த்தன எனலாம்.



