அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரான் எதையும் செய்ய முடியாது : டிரம்ப் அதிரடி..!

அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் முன்னேற முடியாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் கடல் வணிகப் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவின் சூசா பகுதியில் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை, ஈரான் செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஈரான் ஒரு சிறிய விமான எதிர்ப்புச் சாதனத்தை உருவாக்கியதாகவும், அதற்கு 15 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனைத் தாங்கள் 5 நிமிடத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் தெரிவித்தார்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதைத் தடுக்கும் ஈரானின் முயற்சிகளை முறியடிக்கவே, இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் முன்னேற முடியாது என்று திட்டவட்டமாகத் தொரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *