School Teachers: 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது!

Advertisements

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். அதேபோல வட மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேறு மாவட்டங்களில் அதிகமாகவுள்ள ஆசிரியர்களை வட மாவட்டங்களில் காலியிடங்களில் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *